குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

இலவச விசா (Free Visa)

இலங்கைக்கு வருகை தரும் குறுகிய கால பார்வையாளர்களுக்கான விசேட அறிவிப்பு

இலங்கைக்கு வருகை தரும் குறுகிய கால பார்வையாளர்களுக்கான விசேட அறிவிப்பு

25.05.2026 முதல் அமுலுக்கு வரும் வகையில், பின்வரும் 40 நாடுகளின் பிரஜைகள் 30 நாட்களுக்கு இலவசமாக சுற்றுலா விசா (ETA) பெற தகுதியுடையவர்கள்.

25.05.2026 முதல் அமுலுக்கு வருகிறது
30 நாட்கள் கால அவகாசம்
தகுதியுடைய 40 நாடுகள் 40 தகுதியுடைய 40 நாடுகள்
AU அவுஸ்திரேலியா
AT ஆஸ்திரியா
BH பஹ்ரைன்
BY பெலாரஸ்
BE பெல்ஜியம்
CA கனடா
CN சீனா
CZ செக் குடியரசு
DK டென்மார்க்
FI பின்லாந்து
FR பிரான்ஸ்
DE ஜேர்மனி
IN இந்தியா
ID இந்தோனேசியா
IR ஈரான்
IL இஸ்ரேல்
IT இத்தாலி
JP ஜப்பான்
KZ கசகஸ்தான்
KW குவைத்
MY மலேசியா
NP நேபாளம்
NL நெதர்லாந்து
NZ நியூசிலாந்து
NO நோர்வே
OM ஓமான்
PK பாகிஸ்தான்
PL போலந்து
QA கட்டார்
RU ரஷ்யா
SA சவூதி அரேபியா
KR தென் கொரியா
ES ஸ்பெயின்
SE சுவீடன்
CH சுவிட்சர்லாந்து
TH தாய்லாந்து
TR துருக்கி
AE ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
GB ஐக்கிய இராச்சியம்
US அமெரிக்க ஐக்கிய நாடுகள்

தகுதியான கடவுச்சீட்டு வகைகள்

தகுதியுடைய 40 நாடுகள்

மேற்குறிப்பிட்ட நாடுகளின் இராஜதந்திர, உத்தியோகபூர்வ, சேவை அல்லது சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் பிரஜைகள் இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக சுற்றுலா விசா (ETA) பெற தகுதியுடையவர்கள்.

இராஜதந்திர கடவுச்சீட்டு

இலவச விசா (Free Visa) (ETA)

உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு

இலவச விசா (Free Visa) (ETA)

சேவை கடவுச்சீட்டு

இலவச விசா (Free Visa) (ETA)

சாதாரண கடவுச்சீட்டு

இலவச விசா (Free Visa) (ETA)

வருகைக்கு முந்தைய கட்டாய ETA மற்றும் இருதரப்பு பரஸ்பர ஒப்பந்தங்கள்

Electronic Travel Authorization • Bilateral Agreements

மேலே குறிப்பிடப்பட்ட 40 நாடுகளின் பிரஜைகள் மற்றும் இலங்கையுடன் இருதரப்பு பரஸ்பர ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள நாடுகளின் பிரஜைகள் (அதாவது மாலைத்தீவு, சீஷெல்ஸ் மற்றும் சிங்கப்பூர்) உட்பட அனைத்து வெளிநாட்டுப் பிரஜைகளும் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்க. இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கு இடையிலான இருதரப்பு பரஸ்பர ஒப்பந்தத்தின்படி, மாலைத்தீவு பிரஜைகள் ETA முறைமை மூலம் 90 நாட்கள் சுற்றுலா விசாவைப் பெறுவார்கள்.

மாலைத்தீவு 90 Days

ETA மூலம் 90 நாட்கள் சுற்றுலா விசா

சீஷெல்ஸ் இலவச விசா (Free Visa)

இருதரப்பு பரஸ்பர ஒப்பந்தம்

சிங்கப்பூர் இலவச விசா (Free Visa)

இருதரப்பு பரஸ்பர ஒப்பந்தம்

மேலே குறிப்பிடப்பட்ட 40 நாடுகளின் பிரஜைகளுக்கும், மாலைத்தீவு, சீஷெல்ஸ் மற்றும் சிங்கப்பூர் பிரஜைகளுக்கும் இலத்திரனியல் பயண அங்கீகாரம் (ETA) இலவசமாக வழங்கப்படும். எவ்வாறாயினும், 25.05.2026 இற்கு முன்னர் விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட்ட ETA கட்டணம் மீளளிக்கப்பட மாட்டாது.

செல்லுபடியாகும் காலம் & இரட்டை நுழைவு வசதி

இந்த திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகள் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசாவுக்கு (ETA) உரித்துடையவர்கள் (மாலைத்தீவு பிரஜைகள் 90 நாட்களைப் பெறுவர்), 30 நாள் செல்லுபடியாகும் காலத்திற்குள் இலங்கைக்கு முதன்முதலில் வந்த திகதியிலிருந்து இரட்டை நுழைவு வசதி (Double-entry) அனுமதிக்கப்படுகிறது.

Double-Entry Permitted

30 நாட்களுக்கு அப்பால் விசா நீடிப்பு

இலவச விசா பெற்று 30 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியிருக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பொருந்தக்கூடிய விசா கட்டணத்தைச் செலுத்தி விசா நீடிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

Extension Subject to Applicable Fee

ஏனைய நாடுகளுக்கான பொதுவான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இலவசமாக ETA விண்ணப்பிக்க தகுதியுள்ள பிரஜைகளைத் தவிர, ஏனைய அனைத்து நாடுகளின் பிரஜைகளும் இலங்கை ETA முறைமையை நிர்வகிக்கும் பொதுவான விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு தொடர்ந்து உட்படுத்தப்படுவார்கள் என்பதை நினைவில் கொள்க.

General ETA Rules Apply
அதிகாரப்பூர்வ இலத்திரனியல் பயண அங்கீகாரம் (ETA)

இணையவழி ETA விண்ணப்பம் & மேலதிக விபரங்கள்

இலங்கைக்கு வருகை தர விரும்பும் வெளிநாட்டுப் பிரஜைகள் வருவதற்கு முன்னர் இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டும். மேலதிக விபரங்கள் மற்றும் இணையவழி விண்ணப்பத்திற்கு கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க.