பொதுத் தகவல்கள்
40 நாடுகளுக்கான சுற்றுலா விசா (ETA) கட்டணமின்றி வழங்கப்படுகிறது. கூடுதல் தகவல்கள்
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலா அல்லது வணிகப் பயணிகள் இலங்கைக்குள் நுழைவதற்கு ETA பெறலாம். கூடுதல் தகவல்கள்
மூன்றாம் தரப்பினர் மூலம் ETA விண்ணப்பிக்கும் போது https://eta.gov.lk உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக மட்டுமே கட்டணங்களைச் செலுத்த வேண்டும். அதிகாரப்பூர்வ தளத்தை மட்டுமே பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.
வேலை நேரம் என்ன?
மூன்றாம் தரப்பினர் மூலம் ETA விண்ணப்பிக்கும் போது https://eta.gov.lk உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக மட்டுமே கட்டணங்களைச் செலுத்த வேண்டும். இலங்கை எல்லை நுழைவுப் புள்ளிகளில் மீண்டும் பணம் செலுத்துவதைத் தவிர்க்கவும்.
பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வுத் திணைக்களத் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நேரம்: மு.ப. 8.30 முதல் பி.ப. 2.00 வரை (டோக்கன் இலக்கங்கள் பி.ப. 2.00 வரை மட்டுமே வழங்கப்படும்)
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு விசா பெறுதல் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்திலிருந்து 2.30 மணித்தியாலங்களின் பின்னர் பெறப்படலாம். வேறு திகதி ஒதுக்கப்பட்டிருந்தால் அத்திகதியில் மு.ப. 9.00 முதல் நண்பகல் 12.00 வரை பெறலாம்.
கட்டணம் செலுத்தும் கவுண்டர்கள் பி.ப. 3.30 மணிக்கு மூடப்படும். சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.
இலங்கை விசா என்றால் என்ன?
இலங்கை விசா என்பது இலங்கை பிரஜை அல்லாத ஒருவர் நாட்டிற்குள் சட்டப்பூர்வமாக நுழைவதை எளிதாக்குவதற்கும், அவர்கள் தங்கியிருக்கும் காலம் மற்றும் நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் கடவுச்சீட்டில் இடப்படும் உத்தியோகபூர்வ அங்கீகாரமாகும்.
இலங்கை விசாக்களின் வகைகள் யாவை?
ஒரு நபர் இலங்கைக்குள் நுழைவதற்கும்/தங்குவதற்கும் அனுமதிக்கும் மூன்று (03) வகையான விசாக்கள் உள்ளன.
விஜய விசா என்பது ஒரு வெளிநாட்டுப் பிரஜை இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவதற்கான அரசாங்கத்தின் சம்மதத்தைக் குறிக்கும் நுழைவு அனுமதியாகும். இதில் தங்கியிருக்கும் காலம் மற்றும் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
விஜய விசாவின் கீழ் இரண்டு உப பிரிவுகள் உள்ளன
சுற்றுலா விசா: சுற்றுலா, விடுமுறை, உறவினர்களைப் பார்வையிடல், மருத்துவ சிகிச்சை, கலை/விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஒற்றை அல்லது இரட்டை நுழைவுகளுக்கு வழங்கப்படலாம்.
வணிக நோக்க விசா: குறுகிய கால வணிக நோக்கங்களுக்காக இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஒற்றை, இரட்டை அல்லது பலமுறைப் பயணங்களுக்கு வழங்கப்படலாம்.