சுற்றுலா விசா நீடிப்பு (Extension of Tourist Visa)
வருகை விசா நீடிப்பு (Visit Visa Extension) • எனது சுற்றுலா விசாவை எவ்வாறு புதுப்பிப்பது?
எனது சுற்றுலா விசாவை எவ்வாறு புதுப்பிப்பது?
சுற்றுலா விசா நீடிப்புகளில் நான்கு வகைகள் உள்ளன:
ETA (இலத்திரனியல் பயண அங்கீகார முறை மூலம் பெறப்பட்ட விசா) (கட்டண அடிப்படையில்)
30 நாட்கள் சுற்றுலா விசா (கட்டண அடிப்படையில்) (2024 செப்டம்பர் 27 இற்கு முன்னர் பெறப்பட்டது)
ஏழு நாட்டுப் பிரஜைகளுக்கான 30 நாட்கள் இலவச சுற்றுலா விசா (கட்டண அடிப்படையில்) (சீனா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா)
06 மாத சுற்றுலா விசா மற்றும் 06 மாத வணிக விசா (கட்டணம் இல்லை) (2024 செப்டம்பர் 27 இற்கு முன்னர் பெறப்பட்டது)
மேற்படி சுற்றுலா விசா வகைகளை பின்வருமாறு நீடிக்கலாம்:
Online Submission • Head Office BattaramullaETA மூலம் பெறப்பட்ட சுற்றுலா விசாவை இணையவழியாக (https://eservices.immigration.gov.lk/vs/login.php) அல்லது பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று நீடிக்கலாம்.
30 நாட்கள் சுற்றுலா விசா நீடிப்பை இணையவழியாக (https://eservices.immigration.gov.lk/vs/login.php) அல்லது பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று பெறலாம்.
ஏழு நாடுகளின் பிரஜைகளுக்கான (சீனா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா) 30 நாட்கள் இலவச சுற்றுலா விசா நீடிப்பை இணையவழியாக (https://eservices.immigration.gov.lk/vs/login.php) அல்லது பத்தரமுல்ல தலைமை அலுவலகத்திற்குச் சென்று பெறலாம்.
06 மாத சுற்றுலா விசா மற்றும் ஆறு மாத வணிக விசாவை இரட்டை நுழைவு வசதியை அர்ப்பணிப்பதன் மூலம் மேலும் 60 நாட்களுக்கு நீடிக்கலாம். இந்த நீடிப்பை (https://eservices.immigration.gov.lk/OnlineVisa/pages/visaextension/visaextension.xhtml) அணுகுவதன் மூலம் இணையவழியாக மட்டுமே பெற முடியும்.
இணையவழி சுற்றுலா விசா நீடிப்பு (Online Tourist Visa Extension)
Direct Online Application Links • Official Department PortalsETA (இலத்திரனியல் பயண அங்கீகார முறை மூலம் பெறப்பட்ட விசா) கட்டண அடிப்படையில்
30 நாட்கள் சுற்றுலா விசா (கட்டண அடிப்படையில்)
ஏழு நாட்டுப் பிரஜைகளுக்கான 30 நாட்கள் இலவச சுற்றுலா விசா (கட்டண அடிப்படையில்)
(சீனா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா)
06 மாத சுற்றுலா விசா மற்றும் 06 மாத வணிக விசா (கட்டணம் இல்லை)
வருகை விசாவை நீடிக்க எனக்கு என்ன ஆவணங்கள் தேவை?
சுற்றுலா விசாதிரும்பும் விமான டிக்கெட்.
Confirmed return journeyதங்குமிடத்தின் முகவரி மற்றும் தொலைபேசி எண்.
Registered contact detailsவிண்ணப்பதாரரின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம்.
Recent compliant photoசெல்லுபடியாகும் கடவுச்சீட்டு.
Valid travel document* விசா விண்ணப்பிக்கவும் பெற்றுக்கொள்ளவும் விண்ணப்பதாரர் நேரில் சமூகமளிப்பது கட்டாயமாகும். (குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க விரும்புவோருக்கு மட்டும்).
சுற்றுலா விசா புதுப்பித்தல் விண்ணப்பப் படிவத்தை நான் எங்கு பெறலாம்?
Head Office Issuance • Official PDF DownloadDepartment Head Office
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம், பத்தரமுல்ல.
விண்ணப்பப் படிவங்களின் அச்சிடக்கூடிய பதிப்பை இங்கே பதிவிறக்கவும்
Official Sri Lanka Visit Visa Extension Form (PDF format)
எனது சுற்றுலா விசாவைப் புதுப்பிப்பதற்குப் பொருந்தும் ஏனைய நிபந்தனைகள் யாவை?
Statutory Regulations • Department Guidelinesஇலங்கையில் நீங்கள் தங்குவதற்கு உத்தேசித்துள்ள காலம் உங்கள் பயண ஆவணத்தின் காலாவதி திகதிக்கு குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்னதாக முடிவடைய வேண்டும்.
12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆரம்ப வருகை திகதியிலிருந்து முப்பது நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியிருந்தால், பொருத்தமான விசா நீடிப்பு கட்டணத்தைச் செலுத்தி சுற்றுலா விசாவை நீடிக்க வேண்டும்.
சுற்றுலா விசாவுக்கான இரட்டை நுழைவு வசதி (Double entry) அவர்களின் ஆரம்ப வருகை திகதியிலிருந்து முதல் 30 நாட்கள் காலப்பகுதியில் மட்டுமே கிடைக்கும்.
ஆரம்ப வருகை திகதியிலிருந்து முதல் 30 நாட்கள் காலப்பகுதியில் விசா நீடிப்பு கோரப்பட்டால்/பெறப்பட்டால் மேலே குறிப்பிடப்பட்ட இரட்டை நுழைவு வசதி தானாகவே ரத்து செய்யப்படும்.
பொருந்தக்கூடிய விசா நீடிப்பு கட்டணத்தைச் செலுத்தி பெறப்பட்ட சுற்றுலா விசா நீடிப்புகள், நீடிக்கப்பட்ட விசா காலத்தில் நாட்டிலிருந்து வெளியேறும்போது தானாகவே ரத்து செய்யப்படும், மேலும் மீண்டும் இலங்கைக்கு வர புதிய சுற்றுலா விசா பெறப்பட வேண்டும்.
சரியான இணைய இணைப்பு (இங்கே கிளிக் செய்யவும்) ஊடாகவும், உங்கள் தற்போதைய விசா காலாவதியாவதற்கு முன்னதாகவும் சுற்றுலா விசா நீடிப்பிற்கு விண்ணப்பிப்பதை உறுதிசெய்து கொள்ளவும். பிற இணையதளங்கள் மூலமான சுற்றுலா விசா நீடிப்பு விண்ணப்பங்கள் விசா நீடிப்பிற்கான கோரிக்கையாக கருதப்பட மாட்டாது. இங்கே கிளிக் செய்யவும்
பொருத்தமான இணையதளம் மூலம் சுற்றுலா விசா நீடிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாவிட்டால் அல்லது உங்கள் இணையவழி விண்ணப்பம் வெற்றிகரமாக இருந்தபோதிலும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றால், உங்கள் கடவுச்சீட்டு மற்றும் புகைப்படத்துடன் அடுத்த மூன்று வேலை நாட்களுக்குள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகத்திற்கு வருகை தரவும்.
விசா காலாவதியானதால் விதிக்கப்படும் அபராதங்களைத் தவிர்ப்பதற்காக இணையவழியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முயற்சிப்பது கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.
சுற்றுலா (வணிக விசா) வை இணையவழியாக நீடிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
சுற்றுலா விசா நீடிப்பு (Extension of Tourist Visa)
சரியான இணைய இணைப்பு (இங்கே கிளிக் செய்யவும்) ஊடாகவும், உங்கள் தற்போதைய விசா காலாவதியாவதற்கு முன்னதாகவும் சுற்றுலா விசா நீடிப்பிற்கு விண்ணப்பிப்பதை உறுதிசெய்து கொள்ளவும். பிற இணையதளங்கள் மூலமான சுற்றுலா விசா நீடிப்பு விண்ணப்பங்கள் விசா நீடிப்பிற்கான கோரிக்கையாக கருதப்பட மாட்டாது.