வெளிநாட்டு விண்ணப்பங்கள்
இலங்கை இராஜதந்திர தூதரகங்கள் ஊடாக புதிய கடவுச்சீட்டைப் பெறுதல் அல்லது புதுப்பித்தல், உயிரியளவு கைவிரலடையாள நடைமுறைகள், துணைச் சேவைகள் மற்றும் கட்டணங்கள் குறித்த வழிகாட்டல்.
வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தல்கள்
ஒரு இலங்கை பிரஜை வேறொரு நாட்டில் இருக்கும் போது, அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக அல்லது (வசிக்கும் நாட்டில் இலங்கை தூதரகம் இல்லாதவிடத்து) அருகிலுள்ள நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக புதிய கடவுச்சீட்டுக்கு அல்லது கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் கிளையினால் செயல்படுத்தப்படுகின்றன.
இலங்கை இராஜதந்திர தூதரகங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (படிவம் ‘K’- 35 A) மற்றும் ஏனைய ஆதார ஆவணங்கள் இலங்கை தூதரகம் / துணைத் தூதரக அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- வாடிக்கையாளர் பொறுப்பேற்புப் பகுதியை (CUS) உள்ளடக்கும் வகையில் கடவுச்சீட்டு விண்ணப்பப் படிவம் (படிவம் ‘K’- 35 A) இப்போது திருத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் விண்ணப்பதாரர் கையொப்பமிட்டு கொன்சியூலர் அதிகாரியிடம் கையளிக்க வேண்டும். CUS இல் விண்ணப்பதாரரின் கையொப்பம் இல்லாமல் எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- கடவுச்சீட்டு விண்ணப்பத்தை கையளிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை விளக்கும் விசேட அறிவுறுத்தல் குறிப்பு ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் வழங்கப்படும்.
- அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவத்தை (படிவம் ‘K’- 35 A) ஒவ்வொரு நாட்டிலும் உள்ள இலங்கை இராஜதந்திர தூதரகம்/ கொன்சியூலர் பிரிவிலிருந்தும் மற்றும் இந்த வலைத்தளத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
2018 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள் முதன்முறையாக இலங்கைக்கு வருகை தரும் போது அவர்களது கைவிரலடையாளங்கள் பெறப்படும்
01/01/2018 முதல் புதிய கடவுச்சீட்டு வழங்கப்பட்ட விண்ணப்பதாரர், வருகை தரும் நுழைவுத் துறைமுகத்தில் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
-
பயணி முதன்மை குடிவரவு கவுண்டருக்கு செல்ல வேண்டும்அல்லதுநுழைவுத் துறைமுகத்தில் உள்ள தலைமை குடிவரவு அதிகாரிடம் (CIO) நேரடியாக செல்ல வேண்டும்.
- தனித்துவமான குறிப்பு எண்ணுடன் உயிரியளவு தரவு கையகப்படுத்தல் (BDA) படிவம் பயணிக்கு வழங்கப்படும்,
- பயணியால் BDA படிவத்தின் இரண்டு பிரதிகளில் கையொப்பமிடப்பட வேண்டும்
- உயிரியளவு பதிவு செய்யும் போது குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் (DIE) சமர்ப்பிக்க BDA படிவத்தின் ஒரு பிரதி பயணிக்கு வழங்கப்படும்
- மற்றொரு பிரதி விமான நிலையத்தில் வைத்திருக்கப்படும்
புறப்படும் துறைமுகத்தில் உயிரியளவு தகவல்களை வழங்குவதற்கான வசதிகள் இல்லை.
இலங்கைக்குள் நுழைந்த பின்னரான நடைமுறைகள் - குடிவரவு குடியகல்வு திணைக்கள தலைமை அலுவலகத்தில் அல்லது பிராந்திய அலுவலகத்தில்:
- பயணி DIE தலைமை அலுவலகத்திற்கு அல்லது ஏதேனும் பிராந்திய அலுவலகத்திற்கு (மாத்தறை/ கண்டி/ வவுனியா/ குருநாகல்) செல்ல வேண்டும் (View DIE Head Office & Regional Branches)
- OM பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட கவுண்டரில் கைவிரலடையாளம் பதிவு செய்யப்படும்
- இந்நிகழ்விற்கான தோராயமான காத்திருப்பு நேரம் 30-45 நிமிடங்கள் ஆகும்.
- பயணி இலங்கையிலிருந்து புறப்பட அனுமதிக்கும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு புதுப்பிக்கப்படும்.
தொடர்புகொள்ள வேண்டிய நபர்கள்/விவரங்கள்
தொடர்புகொள்ள வேண்டிய நபர்கள்/விவரங்கள்
- பிரதி கட்டுப்பாட்டாளர் - செல்வி W. K. N. நயோமி
- உதவி கட்டுப்பாட்டாளர் - திருமதி K. B. J. பெரேரா
- தொலைபேசி: +94 11 2101524
- மின்னஞ்சல்: acom@immigration.gov.lk
வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களில் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கான பொருந்தக்கூடிய கட்டணங்கள்.
கீழே உள்ள சுற்றறிக்கைகளைப் பார்க்கவும்,
துணைச் சேவைகள்
சான்றளிக்கும் சேவை
கடவுச்சீட்டின் பிரதான தரவுப் பக்கத்தின் பிரதியை எவ்வாறு சான்றளித்துக்கொள்வது?
சான்றளிக்கும் சேவையானது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வெளிநாட்டு தூதரகங்கள் கிளையினால் வழங்கப்படுகிறது. (Location & Hours)
இச்சேவையைப் பெற தேவையான ஆவணங்கள் யாவை?
அசல் கடவுச்சீட்டு மற்றும் சான்றளிக்கப்பட வேண்டிய பிரதிகள்
இச்சேவைக்கு பொருந்தக்கூடிய கட்டணங்கள் யாவை?
மொழிபெயர்ப்பு சேவை
பிரதான பக்கத் தரவுகள் மற்றும் தொடர்புடைய ஒப்புதல்களின் அரபு மொழிபெயர்ப்பு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வெளிநாட்டு தூதரகங்கள் கிளையில் வழங்கப்படுகிறது.
எனது கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்பைப் பெறுவதற்கான நடைமுறை என்ன?
விண்ணப்பதாரர் தனது கடவுச்சீட்டுடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வருகை தர வேண்டும். (Head Office Battaramulla)
இச்சேவைக்கு பொருந்தக்கூடிய கட்டணம் என்ன?
Applying from Abroad or Planning Your Visit to Sri Lanka?
Locate your nearest Sri Lankan Diplomatic Mission, download required forms, or get direct assistance from the Overseas Missions Branch.