விசாரணைகள் பிரிவு
1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டம் மற்றும் அதன் பின்னரான திருத்தங்களின் விதிகளுக்கு அமைவாக நாட்டிற்குள் மற்றும் நாட்டிலிருந்து வெளியே நிகழும் முறையற்ற குடியேற்றத்தை அடையாளம் காணுதல் மற்றும் தடுத்தல், ஒழுங்குபடுத்துதல், கட்டுப்படுத்துதல் மற்றும் நாட்டிற்குள் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட அமலாக்க நடவடிக்கைகளை எடுக்கும் பணி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எங்களை பற்றி
விசாரணைகள் பிரிவு1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டம் மற்றும் அதன் பின்னரான திருத்தங்களின் விதிகளுக்கு அமைவாக நாட்டிற்குள் மற்றும் நாட்டிலிருந்து வெளியே நிகழும் முறையற்ற குடியேற்றத்தை அடையாளம் காணுதல் மற்றும் தடுத்தல், ஒழுங்குபடுத்துதல், கட்டுப்படுத்துதல் மற்றும் நாட்டிற்குள் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட அமலாக்க நடவடிக்கைகளை எடுக்கும் பணி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தொலைநோக்கு
“குடிவரவு குடியகல்வு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான மற்றும் வளமான இலங்கையை கட்டியெழுப்புதல்.”
பணி இலக்கு
“கலாசாரத்தைப் பாதுகாத்து பொருளாதார அபிவிருத்தியினூடாக பாதுகாப்பான மற்றும் வளமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக, செயலூக்கமான மற்றும் எதிர்வினை வழிகளில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை திறமையாகவும் நிலையானதாகவும் அமுல்படுத்துதல்”
நோக்கங்கள்
விசாரணைகள் பிரிவுகுடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு முரணாக உள்நுழைவதாகக் கருதப்படும் அபாயகரமான பயணிகளை அடையாளம் காணும் நோக்கத்துடன், வெளிநாட்டவர் வருகைக்கு முன்னரும், எல்லைப் பிரவேச இடத்திற்கு வருகை தரும் போதும் மற்றும் வருகைக்குப் பின்னரும் அவர்களைப் பரிசோதிப்பதை எளிதாக்குதல்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு முரணாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை வெளியேற்றுவதில் திறம்பட ஈடுபடுதல்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ய உடந்தையாகவும் துணையாகவும் இருக்கும் நபர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துதல்.
ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத மனிதக் கடத்தல்களை அடையாளம் கண்டு, அத்தகைய வழக்குகளை சட்ட நடவடிக்கைகளுக்காகப் பரிந்துரைத்தல்.
விசாக்களை வழங்குவதற்கும் நீடிப்பதற்குமான விசாரணைகளை மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்குதல்.
வெளிநாட்டவர்களைத் தடுத்து வைப்பது மற்றும் நாடு கடத்துவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுதல்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் விசாரணை நடைமுறையின் சீரான தன்மையைப் பேணுதல்.
சட்ட அமுலாக்க நோக்கங்களுக்காக கூட்டுறவை மேம்படுத்துதல் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.
சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள்
விசாரணைகள் பிரிவுஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு
1955 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, 1961 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க, 1993 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, 1998 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க, 2006 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க, 2015 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, 2021 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்கச் சட்டங்களால் திருத்தப்பட்ட 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வு சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகள்
தண்டனைச் சட்டக்கோவை
குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை
சான்றுக் கட்டளைச்சட்டம்
1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க குடியுரிமைச் சட்டம் மற்றும் அதன் பின்னரான திருத்தங்கள்
பொது விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்கள்
விசாரணைகள் பிரிவுஹரி பாரෙන් ரட்ட யமு
නිල මහජන දැනුවත් කිරීමේ ප්රකාශනය: ආරක්ෂිත, නීත්යානුකූල සංක්රමණ සහ මිනිස් ජාවාරම්වලට එරෙහිව දැනුවත් කිරීමේ මාර්ගෝපදේශය.
சரியான வழியில் வௌிநாடு செல்வோம்
உத்தியோகபூர்வ விழிப்புணர்வு வெளியீடு: பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான வெளிநாட்டுப் பயணங்களுக்கான விழிப்புணர்வு வழிகாட்டி.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
விசாரணைகள் பிரிவுகுடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின்படி, வெளிநாட்டு வேலை தேடுபவர் சட்டப்பூர்வமாக வேலைக்கு அமர்த்தப்படக்கூடியவரா என்பதை ஒரு முதலாளி உறுதி செய்ய வேண்டும்.
- முதலாவதாக, வெளிநாட்டவரிடம் செல்லுபடியாகும் பயண ஆவணம் இருக்க வேண்டும்.
- வேலை தேடுபவர் நுழைவு விசா/Landing Endorsement உடன் இலங்கைக்கு வர வேண்டும்.
- பிரவேச துறைமுகத்தில் வழங்கப்பட்ட தங்கும் காலத்திற்குள், வெளிநாட்டு ஊழியருக்கான வதிவிட விசாவுக்கு (Residence Visa) விண்ணப்பிக்க வேண்டும்.
தொடர்பு விபரங்கள்
விசாரணைகள் பிரிவுவிசாரணைப் பிரிவு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், 6 ஆம் மாடி, "சுஹுருபாய", பத்தரமுல்ல.
அதிகாரிகளின் தொடர்பு விபரங்கள்
விசாரணைகள் பிரிவு