விசா கட்டணங்கள்
விசா சேவைகள் • விசா கட்டணங்கள்
அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருப்பதற்கான அபராதங்கள்
2023 ஜூன் 21 ஆம் திகதிய 2337/10 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின்படி, வெளிநாட்டினர் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருப்பதற்கான அபராதம் (கட்டணங்கள்) 2023 ஜூன் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளன.
அசல் விசாவின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த திகதியிலிருந்து கணக்கிடப்படும் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருக்கும் காலம் ஏழு நாட்களுக்கு (07) அதிகமாகி பதினான்கு (14) நாட்கள் வரை தொடருமிடத்து, உரிய விசா கட்டணத்திற்கு மேலதிகமாக இருநூற்றி ஐம்பது (250) அமெரிக்க டொலர்கள் அபராதமாக அறவிடப்படும்.
அசல் விசாவின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த திகதியிலிருந்து கணக்கிடப்படும் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருக்கும் காலம் பதினான்கு (14) நாட்களுக்கு அதிகமாகும் போது, உரிய விசா கட்டணத்திற்கு மேலதிகமாக ஐந்நூறு (500) அமெரிக்க டொலர்கள் அபராதமாக அறவிடப்படும்; மேலும்
அசல் விசாவின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த திகதியிலிருந்து கணக்கிடப்படும் ஏழு (07) நாட்களுக்குள் இலங்கையிலிருந்து வெளியேறும் நபர் ஒருவர், எவ்வித அபராதமும் செலுத்தாமல் வெளியேறும் துறைமுகத்தில் உரிய விசா கட்டணத்தை செலுத்தி இலங்கையிலிருந்து வெளியேறலாம்.
வதிவிட விசா கட்டணம்
(ஒரு வருடத்திற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு)| விசா வகுப்பு | Category / Eligibility Details |
கட்டணம் அமெரிக்க டொலர் (US $)
(ஒரு வருடத்திற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு)
|
|---|---|---|
| வதிவிட விசா - 1 |
|
$200 |
| வதிவிட விசா - 2 |
குடியுரிமைச் சட்டத்தின் 19, 20 அல்லது 21 ஆகிய பிரிவுகளின் கீழ் இலங்கை குடியுரிமை நிறுத்தப்பட்ட எவரேனும் ஒருவர்
|
$100 |
| வதிவிட விசா - 3 |
இலங்கை-இந்திய உடன்படிக்கையின் 13 ஆம் பிரிவின் கீழ் இந்தியப் பிரஜையாக பதிவு செய்யப்பட்ட எவரேனும் ஒருவர்
|
$100 |
| வதிவிட விசா - 4 | மதகுருமார்களுக்கு | $200 |
| வதிவிட விசா - 5 | இலங்கைப் பிரஜை ஒருவரைத் திருமணம் செய்த வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவருக்கு | இலவசம் |
| இலங்கையர் அல்லாத வாழ்க்கைத் துணைவரின் தங்கியிருக்கும் பிள்ளைகள் | $150 | |
| வதிவிட விசா - 6 | மறைந்த இலங்கைப் பிரஜை ஒருவரின் மறுமணம் செய்யாத இலங்கையர் அல்லாத வாழ்க்கைத் துணைவருக்கு (வேலைவாய்ப்புக்கான அனுமதியுடன்) | $100 |
| வதிவிட விசா - 7 | பத்து வருடங்களுக்கு குறையாமல் இலங்கையில் தொடர்ச்சியாக வசித்து வரும் இலங்கைப் பிரஜை ஒருவரின் இலங்கையர் அல்லாத வாழ்க்கைத் துணைவருக்கு (வேலைவாய்ப்புக்கான அனுமதியுடன்) | $100 |
| வதிவிட விசா - 8 | பதினெட்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்டுள்ள இலங்கைப் பிரஜை ஒருவரின் இலங்கையர் அல்லாத வாழ்க்கைத் துணைவருக்கு (வேலைவாய்ப்புக்கான அனுமதியுடன்) | $100 |
| வதிவிட விசா - 9 | வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ள இலங்கை பெற்றோரின் பிள்ளைகள். | $150 |
| வதிவிட விசா - 10 | டிஜிட்டல் நாடோடி (Digital Nomad) | $500 |
சுற்றுலா விசா கட்டணம்
ETA விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறைகள்| ETA விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறைகள் | பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசிய கூட்டமைப்பு (SAARC) நாடுகள் | மற்றைய அனைத்து நாடுகளும் | 12 வயதுக்குட்பட்ட எந்தவொரு நாட்டினதும் பிள்ளைகள் | ||||
|---|---|---|---|---|---|---|---|
| 30 நாட்களுக்கான இருமுறை பிரவேச சுற்றுலா விசா | 30 நாட்களுக்கான பலமுறை பிரவேச வர்த்தக விசா | 2 நாட்களுக்கான ஒருமுறை பிரவேச இடைவழி விசா | 30 நாட்களுக்கான இருமுறை பிரவேச சுற்றுலா விசா | 30 நாட்களுக்கான பலமுறை பிரவேச வர்த்தக விசா | 2 நாட்களுக்கான ஒருமுறை பிரவேச இடைவழி விசா | ||
| விண்ணப்பதாரரினால் | US$ 20 | US$ 30 | இலவசம் | US$ 50 | US$ 55 | இலவசம் | இலவசம் |
| மூன்றாம் தரப்பினரால் | US$ 20 | US$ 30 | இலவசம் | US$ 50 | US$ 55 | இலவசம் | இலவசம் |
| வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் | US$ 20 | US$ 30 | இலவசம் | US$ 50 | US$ 55 | இலவசம் | இலவசம் |
| குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில், கொழும்பு, இலங்கை | US$ 20 | US$ 30 | இலவசம் | US$ 50 | US$ 55 | இலவசம் | இலவசம் |
| இலங்கையின் வருகை துறைமுகத்தை வந்தடையும் போது | US$ 25 | ------- | இலவசம் | US$ 60 | ------- | இலவசம் | இலவசம் |
சுற்றுலா விசா நீடிப்பு கட்டணங்கள்
சுற்றுலா விசா நீடிப்பு கட்டண அட்டவணை பின்வருமாறு அமைதல் வேண்டும்:
| நாடுகள் | நாட்கள் | ||
|---|---|---|---|
| 31 - 90 | 91-180 | 181- 270 | |
|
ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, போலந்து, இத்தாலி, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, ஸ்பெயின், கிரீஸ், சுவீடன், ஹங்கேரி, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, நோர்வே, போர்த்துக்கல், ஸ்லோவேனியா, எஸ்டோனியா, மொரிஷியஸ், ஐஸ்லாந்து மற்றும் கியூபா |
USD 100 | USD 150 | USD 200 |
| அமெரிக்க ஐக்கிய நாடுகள் | USD 100 | USD 200 | |
|
சிங்கப்பூர், மாலைத்தீவுகள், சீஷெல்ஸ் மற்றும் செக் குடியரசு |
FOC | USD 150 | USD 200 |
|
அமெரிக்கா, சிங்கப்பூர், மாலைத்தீவுகள், சீஷெல்ஸ் மற்றும் செக் குடியரசு தவிர்ந்த ஏனைய நாடுகள் |
USD 60 | USD 150 | USD 200 |
குறிப்பு: ETA அல்லது வருகை விசா (on arrival visa) 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். சுற்றுலாப் பயணி 30 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால், 30 நாள் சுற்றுலா விசா நீடிக்கப்பட வேண்டும்.
2. இலவச விசா
இலவச விசா – ஏழு நாட்டவர்களுக்கு (சீனா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா) மேலே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ள கட்டணம் மற்றும் காலத்திற்கு உட்பட்டு நீடிக்கப்படலாம்
3. ETA வர்த்தக நோக்கம்
Business Visa Extensions Schedule| Extension Period & Eligibility | கட்டணங்கள் - US $ |
|---|---|
|
* வருகை தந்த திகதியிலிருந்து 30 ஆம் நாள் முதல் 180 ஆம் நாள் வரை
அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு (30 நாட்களுக்குப் பிறகு 180 நாட்கள் வரை)
|
$100 |
|
* வருகை தந்த திகதியிலிருந்து 30 ஆம் நாள் முதல் 90 ஆம் நாள் வரை
அமெரிக்க ஐக்கிய நாடுகள் தவிர்ந்த ஏனைய எந்தவொரு நாட்டிற்கும்
|
$100 |
|
* வருகை தந்த திகதியிலிருந்து 90 ஆம் நாள் முதல் 180 ஆம் நாள் வரை
அமெரிக்க ஐக்கிய நாடுகள் தவிர்ந்த ஏனைய எந்தவொரு நாட்டிற்கும்
|
$200 |